செவ்வாய், செப்டம்பர் 18, 2012

விண்டோஸ் 8ன் சிறப்பம்சங்கள்...!!!



மைக்ரோசாப்ட் நிறுவனம் விண்டோஸ் 8 இன் முதல் சோதனை பதிப்பை சமீபத்தில் வெளியிட்டது நினைவிருக்கலாம்.
Description: http://www.ewow.lk/images/stories/articles/technology/computer/software/windows8/windows8logo.jpgஇதனை பலர் பயன்படுத்தியிருக்க மாட்டீர்கள் நானும் இப்பொழுதுதான் எனது கணினியில் நிறுவியுள்ளேன்.  இருந்தாலும் இணையத்தில் கிடைத்த சில விடயங்களை வைத்து விண்டோஸ் 8 இன் சிறப்பம்சங்களை பற்றி இந்த கட்டுரையில் உங்களுடன் பகிர்ந்துகொள்ளப்போகிறேன்.
1)பயனர் இடைமுகம்(User Interface)
இந்த இயங்குதளத்தில் பிரபலமான WP7 Metro பயனர் இடைமுகம் பயன்படுத்தப்படுகிறது.
Description: http://www.ewow.lk/images/stories/articles/technology/computer/software/windows8/windows81.png
மேலும் இதில் மற்றொரு முக்கிய விஷயம் இதில் start menu(ஸ்டார்ட் மெனுவிற்கு) பதிலாக ஸ்டார்ட் திரை பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த திரை முழுவதும் குறுக்கு விசை ஐகான்களால் நிறைந்திருக்கும், நீங்கள் அதில் உள்ள ஐகான்களை நீக்கவோ சேர்க்கவோ மேலும் அவற்றின் அளவை மாற்றவோ முடியும்.
Description: http://www.ewow.lk/images/stories/articles/technology/computer/software/windows8/windows82.png
மேலும் இதில் பயன்படுத்தப்பட்டுள்ள பயனர் இடைமுகத்தினால் இது மொபைல் சாதனங்களிலும் பயன்படுத்த எளிமையாய் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது, மேலும் இந்த பயனர் இடைமுகம் தொடுதிரை(touch screen) சாதனங்களில் இயங்குவதற்கு மிகவும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
2)தேடல் வசதி(Search)
Description: http://www.ewow.lk/images/stories/articles/technology/computer/software/windows8/windows83.png
மேலும் இந்த இயங்குதளத்தில் கோப்புகளை தேடும் வசதி மிகவும் விரைவாக இயங்கும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது, விண்டோஸின் முந்தைய பதிப்புகளை போல அல்லாமல் இந்த தேடுதல் முறையில் நீங்கள் ஒரு கோப்பின் பெயர் மட்டுமல்லாமல் அதன் உள்ளே உள்ள ஏதேனும் ஒரு விஷயத்தை கொடுத்தும் தேடலை மேற்கொள்ளலாம். அதாவது ஒரு Ms-Word கோப்பின் உள்ளே சேமிக்கப்பட்டுள்ள ஏதேனும் ஒரு வார்த்தையை தேடினால் கூட இந்த கோப்பு காண்பிக்கப்படும்.
3)குறைவான துவக்க நேரம்(Less Start up time)
இதில் கூறப்பட்டுள்ள மற்றொரு வசதியானது அதன் பூட்டிங் நேரம் குறைவானது என்பதுதான், மைக்ரோசாப்ட் 5 விநாடிகளில் ஸ்டார்ட் ஆகி பயன்பாட்டுக்கு தயாராகிவிடும் என்று அறிவித்திருந்தது ஆனால் அதைவிட அதிக நேரம் எடுத்துக்கொள்கிறது, விண்டோஸின் முந்தைய பதிப்புகளை விட இந்த துவக்க நேரம் குறைவானதுதான், மேலும் விண்டோஸ் 7ல் இயங்கிய அனைத்து மென்பொருட்களும் அதைவிட வேகமாக விண்டோஸ் 8 இல் இயங்குகின்றன. நான் பயன்படுத்திப் பார்த்ததில் வித்தியாசத்தை வெகுவாக உணர முடிந்தது.
4)மேம்படுத்தப்பட்ட எக்ஸ்ப்ளோரர்(windows explorer)
இதில் உள்ள மிக மிக முக்கியமான விஷயம் இதில் விண்டோஸ் எக்ஸ்ப்ளோரர் மிகவும் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதில் மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2007ல் பயன்படுத்தப்பட்டுள்ளதை போன்ற ரிப்பன் மெனு பட்டை பயன்படுத்தப்பட்டுள்ளது.
Description: http://www.ewow.lk/images/stories/articles/technology/computer/software/windows8/windows84.png
இந்த ரிப்பன் மெனுவானது நீங்கள் தெரிவு செய்துள்ள கோப்பின் வகையை பொறுத்து தானாக மாறிக்கொள்கிறது, நீங்கள் mp3 கோப்பை தெரிவு செய்தால் ப்ளே வித் தெரிவும் மற்ற தெரிவுகளும் , நீங்கள் ZIP கோப்பை தெரிவு செய்தால் Extract ஆப்ஷனும் தானாகவே மாறிக்கொள்கிறது.
5)இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 10(IE 10)
Description: http://www.ewow.lk/images/stories/articles/technology/computer/software/windows8/windows85.png
இந்த இயங்குதளத்தில் இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 10 பதிப்பு இணைக்கப்பட்டுள்ளது, இதில் CSS3 மற்றும் HTML5னை இயக்கும் திறன் உள்ளது, எனவே ஃப்ளாஷ்(flash) இல்லாமலேயே வீடியோக்களை பார்த்தல் மற்றும் பல வேலைகளை செய்யலாம்.
6)மார்க்கெட் ஸ்டோர்(Market)
விண்டோஸ் 8 பதிப்பின் வெளியீட்டுடன் ஆண்ட்ராய்டு, ஆப்பிள் மென்பொருட்களுக்கு உள்ளதைப் போன்ற மார்க்கெட் ஸ்டோர் ஒன்றினை அறிமுகப்படுத்தும் திட்டமும் மைக்ரோசாப்டிடம் உள்ளது, இது இன்னும் முழுமையாக முடிவடையாததால் இப்போது முன்னோட்டமாக ஒரு சில மென்பொருட்கள் கிடைக்கின்றன.
7)லைவ் சின்க்ரோனைஷேசன்(Live sync)
இதில் உள்ள மேலும் ஒரு முக்கிய வசதி நமது டேட்டாக்களை நேரடியாக சின்க்ரனைஸ்(Synchronise) செய்ய இயலும், உங்களின் விண்டோஸ் லைவ் ஐடியை பயன்படுத்தி நீங்கள் உள்நுழைந்தால் உங்கள் கோப்புகள், அமைவுகள் அனைத்தும் சின்க் செய்யப்பட்டு விடும்.
Description: http://www.ewow.lk/images/stories/articles/technology/computer/software/windows8/windows86.png
பின்னர் நீங்கள் எந்த கணினியிலும் உங்கள் ஐடியினை பயன்படுத்தி அந்த கோப்புகளை பயன்படுத்திக் கொள்ளலாம், இதன் மூலம் மைக்ரோசாப்டானது கூகுள் க்ரோம் இயங்குதளத்தின் போட்டியை சமாளிக்க ஒரு அடி எடுத்து வைத்துவிட்டது, நாம் இந்த சிங்க் மற்றும் கூகுள் க்ரோம் இயங்குதளத்தை பயன்படுத்தும் அளவிற்கு தேவையான இணைய வேகத்தை இன்னும் அடையவில்லை என்றே கருதுகிறேன், மற்ற நாடுகளுக்கு இந்த வசதி ஒரு அரிய வரப்பிரசாதம்.
இவ்வளவையும் படித்தபிறகு உங்களுக்கு விண்டோஸ் 8 பயன்படுத்தி பார்க்க எண்ணம் வரலாம்,சோதனை பதிப்பிற்கான தரவிறக்க சுட்டிக்கு இங்கே அழுத்தவும்.

சனி, செப்டம்பர் 01, 2012

உங்கள் லினக்ஸ் டெஸ்க்டாப்பில் புதிய ஃபயர்பாக்ஸ் OS முயற்சி பண்ணி பார்க்க தயாரா?


'Boot 2 Gecko' என குறியீட்டு பெயரிடப்பட்ட ஃபயர்பாக்ஸ் OS, மோசில்லாவின் ஒரு முழுமையான இணைய அடிப்படையிலான திறந்த மூல மொபைல் இயங்குதளம் ஆக ஸ்மார்ட்போன் சந்தையில் வெளியிடப்பட்டுள்ளது.

லினக்சை அடிப்படையாகக் கொண்டு, பயர்பாக்ஸ் OS ஆனது 'திறந்த மூல வலை' ('open web' technologies) தொழில்நுட்பங்களைப்  பயன்படுத்தி ஒரு ஸ்மார்ட்போனில் இருந்து நீங்கள் எதிர்பார்ப்பதை விட அனைத்து விதமான HTML5 பயன்பாடுகள் உட்பகுறிப்பிட்ட இயங்குதளம் சார்ந்த API கள் தவிர எல்லாவற்றையும் ஆதரிக்க கூடியது.

இது பற்றி மேலும் அறிய பின்வரும் வீடியோவை பாருங்கள்:


ஃபயர்பாக்ஸ் OS தினசரி உருவாக்கங்கள் மேம்படுதல்கள் இப்போது டெஸ்க்டாப்பில் பயன்படுத்தி பார்க்கும் வகையில் கிடைக்கிறது. அவற்றை நிறுவுவதும் மிகவும் எளிது.
கீழே உள்ள வழிமுறைகளை பின்பற்றவும்:

சமீபத்திய ஃபயர்பாக்ஸ் OS உருவாக்க பதிவிறக்க இங்கே அழுத்தவும்.
http://ftp.mozilla.org/pub/mozilla.org/b2g/nightly/latest-mozilla-central/

ஒரு b2g கோப்புறையை பெற அதை Extract  செய்து  பிரித்தெடுக்கவும்.

Gaia நிறுவி ஒரு புதிய சுயவிவரத்தை உருவாக்க பின்வரும் கட்டளைகளை இயக்கவும்:

git clone git://github.com/mozilla-b2g/gaia
make -C gaia profile


இப்போது பயர்பாக்ஸ் OS இனை இயக்க பின்வரும் கட்டளைகளை இடவும்:

/path/to/your/b2gfolder/b2g -profile gaia/profile

இந்த உருவாக்கங்கள் டெவலப்பர்களுக்கு மட்டுமே. பயர்பாக்ஸ் OS ஆனது இன்னும் சோதனை நிலையிலையே உள்ளது. எனவே இன்னும் முழுமையான தீர்வுகள் இல்லை.
சில திரைக்காட்சிகள்:




மேலும் தகவல்களுக்கு:

புதிய பயர்பாக்ஸ் OS பதிப்பின் செய்முறை விளக்க வீடியோக்கள்:





புதிய பயர்பாக்ஸ் OS பதிப்பினை Samsung Galaxy S II வில் நிறுவுவது பற்றிய செய்முறை விளக்க வீடியோ:


பயர்பாக்ஸ் OS பதிப்பினை Nexus S வில் பயன்படுத்துவது பற்றிய வீடியோ:



சமீபத்திய மேம்படுத்தப்பட்ட பதிப்பின் திரைக்காட்சிகள்: