புதன், ஜூலை 18, 2012

Gmail மூலம் உங்கள் நண்பர்களுக்கு இலவசமாக SMS அனுப்பவும்உங்கள் Gmail கணக்கிலிருந்து நேரடியாக உங்கள் நண்பர்களுக்கு இலவசமாக செய்திகளை (SMS) அனுப்பலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா?
இன்றே Gmail SMS ஐ முயற்சித்து, உங்கள் கணினியிலிருந்து உங்கள் நண்பர்களுக்குச் செய்தி அனுப்பவும்.


உங்கள் Gmail கணக்கில் உள்நுழையவும். அரட்டைக்கு மேலே உள்ள SMS அனுப்புஎன்ற பெட்டியில், SMS அனுப்ப விரும்பும் தொலைபேசி எண்ணை உள்ளிடவும்.
உரையாடல் பெட்டியில், SMS பெறுநரின் தொடர்புப் பெயரை உள்ளிட்டு, நாடு மற்றும் தொலைபேசி எண் சரியாக உள்ளதா என்பதைச் சரிபார்க்கவும். பின்னர், சேமி.
உங்கள் செய்தியை அரட்டை சாளரத்தில் தட்டச்சு செய்து,Enter.
நீங்கள் உள்ளிட்ட தொலைபேசி எண்ணுக்கு உங்கள் செய்தி அனுப்பப்படும்.

உங்கள் தொடர்பு பதிலளித்தால், உரைச் செய்திக்கான பதில், உங்கள் அரட்டையில் பதிலாகத் தோன்றும். வழக்கமான அரட்டைகளைப் போலவே, இந்த உரையாடல்களும் உங்கள் அரட்டை வரலாற்றில் சேமிக்கப்படும்.

குறிப்பு: Gmail இலிருந்து எந்த ஒரு தொலைபேசிக்கும் செய்தியை அனுப்பவது மற்றும் பெறுவது இலவசமே. தொலைபேசியிலிருந்து SMS வழியாக Gmail க்குப் பதிலளிக்கும்போது, வழக்கமான SMS கட்டணத்தை, உங்கள் மொபைல் சேவை வழங்குநர் வசூலிக்கலாம். Gmail SMS தற்போது இலங்கையில் Mobitel மற்றும் Dialog பயனர்களுக்குக் கிடைக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக