வியாழன், ஜூலை 19, 2012

YouTube அறிமுகப்படுத்தும் புதிய பயனுள்ள வசதி Face-Blurring Tool


புதுமைகள் என்றால் அது  கூகிள். அதிலும் பல படங்களை பார்க்க அவர்கள் அறிமுகப்படுத்திய சேவை youtube அல்ல. கூகிள் வீடியோ தான் அது. தொழிநுட்ப பிரச்சனையாலும் போட்டி சூழலாலும் தனக்கு போட்டியாக இருந்த youtube சேவையை அதை ஆரம்பித்த தம்பதியினரிடம் பணம் கொடுத்து வாங்கி இன்றுவரை அபிவிருத்தி செய்து வருகிறது.  அந்த வகையில்  நேற்று அவர்கள் அறிமுக படுத்திய அட்டகாசமான வசதி தான் இந்த  Face-Blurring Tool.  Face-Blurring Tool என்றால் என்ன?
இதன் பயன் பாட்டை  பெரும்பாலும் சாதாரண நிகழ்சிகளில் பார்த்து இருப்பீர்கள். வயது வந்தவர்களுக்கு உரிய காட்சிகளை  அல்லது அந்தரங்க பாகங்களை தவிர்க்க முடியாத சூழலில் ஒளி பரப்பும் போது அப் பகுதியை கலங்கல் தன்மையுடன் தோன்ற செய்வது bluring எனப்படும்.  வேகமாக ஓடும் வாகன சில்லுகளை மெதுவான ஷுட்டேர் வேகத்தில் படம் பிடிக்கும் போது இழுபடும் தன்மையும் இதுவே.

ஆனால் youtube இந்த நோக்கங்களுக்காக மட்டும் அன்றி போது இடங்களில் எடுக்கப்பட்ட காணொளிகள், மற்றும் கூட்டங்களில் எடுக்கப்பட காணொளிகளில் குறிப்பிட்ட அல்லது அனைவரது முகங்களையும் நீக்கும் நோக்கத்தைதையும் அடிப்படையாக கொண்டே அறிமுகப்படுத்தியது.


இதன் மூலம் தனிநபர் பாதுகாப்புக்கள் உறுதி படுத்தபடுகிறது. இவ்வாறான சேவை ஏற்கனவே கூகிள் mapஇல் தமது முகங்களை வேண்டுகோளின் அடிப்படையில் நீக்குவதன் மூலம் கூகிள் அறிமுகப்படுத்தி இருந்தது.

இதை பயன்படுத்த  நீங்கள் தரவு ஏற்றிய காணொளியை யு tube வீடியோ எடிட்டர் இல் எடிட் செய்யும் போது தானாகவே இது தொடர்பான கோரிக்கை கூகிள் மூலம் தோன்ற செய்யப்பட்டுள்ளது. இதை விட இதற்கான optinனும் எடிட்டர் பகுதியில் உள்ளது.

 இதை  பற்றி அவர்கள் “Whether you want to share sensitive protest footage without exposing the faces of the activists involved, or share the winning point in your 8-year-old’s basketball game without broadcasting the children’s faces to the world, our face blurring technology is a first step towards providing visual anonymity for video on YouTube,” என்று கூறுகிறார்கள்.

இது நிச்சயம் உங்கள் தனியுரிமையை பாதுகாப்பதில் முன்னுரிமை வகிக்கும்.
நீங்கள் இவ்வாறு முகங்களை நீக்கிய பின்னர் விரும்பினால் original videoவை நீங்கள் அழிக்கவும் சந்தர்ப்பம் தரப்படுகிறது. இது தொடர்பான இடை முகம்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக