புதன், ஜனவரி 23, 2013

விஸ்வரூபமும் முஸ்லிம்களும்...

முஸ்லிம்கள் அனைவரும் தீவிரவாதிகளல்ல. ஆனால் மோசமான மறுக்க முடியாத உண்மை என்னவெனில் உலகின் கொடிய பயங்கரவாதிகளின் கூட்டமானது தாம் அல்லாவின்பெயரால் புனிதப் போர் செய்வதாகக் கூறி மிருகத்தனமான அருவருப்பான கொடிய செயல்களில் ஈடுபட்டு உயிர்களைச் சூறையாடுகின்றனர் இவர்கள் முஸ்லிமாக இருக்க தகுதியானவர்களா என்பதே எனக்குச் சந்தேகமாக இருக்கிறது.

விஸ்வரூபம் திரைப்படத்திற்கு எதிராக மருதானை சினிசிட்டி திரையரங்கம் முற்றுகையாம். விஸ்வரூபம் திரைப்படத்தை இலங்கையில் திரையிடக்கூடாது என்று வெள்ளிக்கிழமை மருதானைல போராடப்போறாங்களாம்.. இதுகளையெல்லாம் என்னென்று சொல்லுறது. தங்களை சேர்ந்த, ஒரு அப்பாவி பொண்ணோட உயிருக்காக ஒரு கண்டனம் எதிர்ப்பறிக்கை விடாமால் முஸ்லிம் சட்டப்படி எல்லாம் சரியாத்தான் நடந்திச்சுன்னுன்னு சொல்லிட்டு இப்ப இதுக்கு மட்டும் பொதுக்கிட்டுவருதோ கோவம்... இதுகளுக்கெதிரா மட்டும் கெளம்பிடுவாங்க… தாங்க முடியல்ல… இந்த மந்தைக்கூட்டத்தின் தொல்லை..!

இங்கு மந்தைக் கூட்டம் என்று சொன்னது எல்லா முஸ்லிம்களையும் இல்ல தங்கள் அரசியல் தேவைக்காக ஆளும் கட்சிக்கு சார்பாக அறிக்கை விட்டு வாழ்க்கை நடத்தும் ஒரு சில மததலைவர்களையும் அவர்கள் பினால் அலையும் கூட்டத்தையும்தான். ஆனால் எனக்கு விரிவுரையாளர்களாக கல்வி போதிக்கும் மனசாட்சிக்கு விரோதமாக நடக்காத ஒருசில முஸ்லிம் இனத்தவரை தெய்வமாக மதிக்கிறேன்.

விஸ்பரூபமானது தற்போது தடைசெய்யப்பட்டமையானது குறுகிய அரசியல் நோக்கம் கொண்ட ஜெயலலிதாவின் அரசியல் சித்து விளையாட்டாகவே கருதுகிறேன். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் முஸ்லிம்களின் ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்காக தான் முஸ்லிம்களின் காவலர் என்பதை நிரூபித்து சிறருபான்மை முஸ்லிம்களின் வாங்குவங்கியைக் குறிவைத்து இத்தடை போடப்படுள்ளது.

இத்திரைப்படத்தில் கமலகாசன் புதிதாக ஒன்றும் முஸ்லிம்களை கேவலமாச் சித்தரித்திருக்க வாய்ப்பில்லை. ஏற்கனவே உலகில் தீவிரவாதிகளால் நடாத்தப்பட்ட கொடூரங்களை உலகுக்கு வெளிக்காட்டியிடுக்கிறார். உண்மைச்சம்பவங்களினை ஒத்தே கதை அமைந்திருக்கும். தலை வெட்டிக் கூட்டத்தின் (ஒட்டு மொத்த முஸ்லிம்கள் அல்ல தீவிரவாதிகள் மட்டும்) சுயரூபத்தினை முழு உலகத்திற்கும் தோலுரித்துக்காட்ட உலகநாயகன் போன்ற உயர்ந்த கலைஞர்களின் படைப்புகள் தேவை.